#Shock:7 நரிகளின் உயிரை பறித்த “கேனைன் வைரஸ்” – மக்களை பாதிக்குமா?..!

Default Image

ஜார்க்கண்ட்:ராஞ்சி உயிரியல் பூங்காவில் உள்ள 7 நரிகள் கேனைன் வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கேனைன் வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ்கள் மக்களை பாதிக்குமா? என்று காண்போம்.

ஜார்க்கண்ட்டின்,ராஞ்சியில் உள்ள பிர்சா உயிரியல் பூங்காவில் கடந்த ஒரு மாதத்தில் அதிக அளவில் தொற்றக்கூடிய கேனைன் டிஸ்டெம்பர் வைரஸ் (சிடிவி) 7  நரிகளின் உயிர்களை பறித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பெரும்பாலான நரிகள் 2004 ஆம் ஆண்டு உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டு வளர்க்கப்பட்டு வந்த நிலையில்,கடந்த மார்ச் முதல் வாரத்தில் நரிகளின் முதல் மரணம் பதிவாகியது.அதன்பிறகு,அங்கிருந்த இருந்த 7 நரிகளும் ஒவ்வொன்றாக இறந்ததாகவும்,இருப்பினும், அவைகளில் பெரும்பாலான நரிகள் வயதானவை என்றும் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து,வைரஸ் எவ்வளவு தீவிரமானது மற்றும் மனிதர்களுக்கு பரவக்கூடிய புற்றுநோய்கள் உள்ளதா என்பதைப் பார்ப்போம்.

கேனைன் இன்ஃப்ளூயன்ஸா என்றால் என்ன?

இது நாய் காய்ச்சல் என்றும் அழைக்கப்படுகிறது.இவை நரி,நாய்கள் மற்றும் ஓநாய்கள் போன்ற கோரை வகை குடும்பங்களுக்கு ஆபத்தானதாக கருதப்படுகிறது.இந்த வைரஸ் நுரையீரலை பாதிக்கிறது மற்றும் சுவாசம்,இரைப்பை குடல் மற்றும் நரம்பு மண்டலங்களை பாதிக்கிறது.

மேலும்,இரண்டு வெவ்வேறு இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் உள்ளன. அதில் ஒன்று H3N8 வைரஸ் மற்றொன்று H3N2 வைரஸ் ஆகும்.கேனைன் இன்ஃப்ளூயன்ஸா A(H3N2) வைரஸ்கள்,பருவகால இன்ஃப்ளூயன்ஸா A(H3N2) வைரஸ்களிலிருந்து வேறுபடுகின்றன.

நாய்களில் கேனைன் இன்ஃப்ளூயன்ஸாவின் அறிகுறிகள் என்ன?

  • இருமல்
  • மூக்கு ஒழுகுதல்
  • காய்ச்சல்
  • சோம்பல்
  • பசி குறைவு போன்றவற்றின் விளைவாக நிமோனியா மற்றும் சில நேரங்களில் மரணமும் ஏற்படலாம்.

கேனைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மக்களை பாதிக்குமா?:

பொதுவாக,கேனைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் மக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தினாலும்,தற்போது வரை, நாய்களிடமிருந்து மனிதர்களுக்கு கேனைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் பரவியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.மேலும் உலகளவில் கேனைன் இன்ஃப்ளூயன்ஸா வைரஸால் மனிதர்களுக்கு தொற்று ஏற்பட்டதாக ஒரு அறிக்கை கூட இல்லை.

இருப்பினும்,இன்ஃப்ளூயன்ஸா வைரஸ்கள் தொடர்ந்து உருமாறிக்கொண்டே இருப்பதால்,அது மக்களைப் பாதிக்கலாம் என்றும் மற்றும் மக்களிடையே எளிதில் பரவுகிறது எனவும், இதனால் மக்களிடையே நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்