ரபேல் போர்விமான முறைகேடுகள் குறித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடினர் .சுமார் 59 ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்திருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறிய குற்றசாட்டை மத்திய பிஜேபி அரசு நிராகரித்தது.
இந்நிலையில் , நேற்று நடைபெற்ற மக்களவையில் ரபேல் குறித்த சிஏஜி அறிக்கையை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தாக்கல் செய்தார். இதில் மோடி அரசு பிரான்சுடன் மேற்கொண்ட ரபேல் போர் விமான ஒப்பந்தம் காங்கிரஸ் அரசு போட்ட ஒப்பந்தத்தை விட 2.86 சதவீத விலை மலிவானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.ரபேல் ஒப்பந்தங்கள் குறித்து மட்டும் 30 பக்கங்களில் விளக்கப்பட்டுள்ளது. ஆனால் ரபேல் விமானம் குறித்த விலை அந்த அறிக்கையில் இடம்பெறாதது மீண்டும் சர்சையை ஏற்படுத்தியுள்ளது.