சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குஎண்ணிக்கை தொடங்கியது..!
- கடந்த 05- தேதி கர்நாடக மாநிலத்தில் 2 தொகுதி தவிர 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது.
- அதற்கான வாக்கு எண்ணிக்கை தற்போது தொடங்கியது.
கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் இருந்த போது அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் 17 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அப்போதைய சபாநாயகர் ரமேஷ்குமார் 17 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இதை தொடர்ந்து 17 எம்.எல்.ஏ.க்களும் உச்சநீதிமன்றத்தில் தகுதி நீக்கத்தை தடை செய்ய கோரி வழக்குகள் தொடர்ந்தன. இதனால் காங்கிரஸ் மதச்சார்பற்ற ஆட்சி கவிழ்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகல் 17 பேரின் தகுதி நீக்கம் செல்லும் என அறிவித்தார்.
இந்நிலையில் கடந்த 05- தேதி கர்நாடக மாநிலத்தில் 2 தொகுதி தவிர 15 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதற்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. மதியம் 12 மணி அளவில் 15 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கபடுகிறது.
பெங்களூரில் உள்ள 4 தொகுதி குறைவான வாக்குகள் பதிவானதால் விரைவில் முடிவுகள் வெளியாகலாம்.