பரபரப்பு…பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசம்!

BengaluruFire

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் உள்ள பிஇஎஸ் பல்கலைக்கழகம் அருகே, வீரபத்ரநகரில் அமைந்திருக்கும் தனியார் பேருந்து நிலையத்தில், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திடீரென தீ பிடித்து எரிந்ததால் சிறிது நேரம் அப்பகுதி பரபரப்பாக காட்சியளித்தது.

பின்னர், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். முதற்கட்ட தகவல்களின்படி, இந்த தீ விபத்தில் இதுவரை யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சும்மா நிறுத்தப்பட்டிருந்த பேருந்துகள் திடீரென தீப்பற்றி எரிந்து உள்ளதாகவும், இதில் 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் எரிந்து நாசமாகியுள்ளது. ஏனெனினும், இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

 

இது தொடர்பான மேலும் விவரங்கள் காத்திருக்கின்றன…

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்