உத்தரகாண்டில் பேருந்து விபத்து.! குஜராத்தைச் சேர்ந்த 7 யாத்ரீகர்கள் உயிரிழப்பு.!

UttarakhandBusAccident

உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் குஜராத்தில் இருந்து யாத்ரீகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 28 பேர் காயமடைந்தனர். பேருந்து 35 பேருடன் கங்கோத்ரியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தது. கங்னானி என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டது.

உத்தரகாசி காவல் கண்காணிப்பாளர் அர்பன் யதுவன்ஷி கூறுகையில், ரிஷிகேஷ்-கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் பட்வாடி தெஹ்சில் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்