பேருந்து கால்வாயில் விழுந்து விபத்து..! 7 பேர் உயிரிழப்பு..15 பேர் காயம்..!
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில் 7 உயிரிழந்தனர்.
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் தர்சி அருகே 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிச் சென்ற ஆந்திரப் பிரதேச மாநில சாலைப் போக்குவரத்துக் கழகப் பேருந்து சாகர் கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்பின் தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தண்ணீர் கால்வாயில் பேருந்து கவிழ்ந்ததில் 7 வயது குழந்தை உட்பட 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 15க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பிறகு விபத்தில் காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இதன்பின், முதற்கட்ட விசாரணையில், பேருந்து காக்கிநாடா நகரில் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த போது விபத்து நடந்ததாகவும், விபத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என்றும் போலீசார் தெரிவித்தனர்.