மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்து 3 பேர் பலி…!!
மும்பையில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
மும்பையின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள மோதிலால் நகரில், 2 மாடி கட்டிடத்தின் கட்டுமான பணியின் போது கட்டிடம் திடீரென இடிந்து விழுந்துள்ளது. இதில் 3 பேர் பலியாகினார். படுகாயமடைந்த 6 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, 3 தீயணைப்பு வாகனங்களில் வந்த மீட்பு படையினர், கட்டிடத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த கோரகான் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.