டெல்லியில் தொடரும் கொடூர கொலைகள்…! ஷ்ரத்தா பாணியில் மேலும் ஒரு கொலை சம்பவம்..!

Default Image

கணவனின் தவறான நடக்கை காரணமாக கணவனை துண்டு, துண்டாக வெட்டிய தாய் மற்றும் மகன் கைது. 

டெல்லியில், லிவிங் டூ கெதர் வாழ்க்கை முறையில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா – அப்தாப், அப்தாப் திருமண செய்ய வற்புறுத்திய நிலையில், ஷ்ரத்தா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அப்தாப் அவரை 35 துண்டுகளாக வெட்டி, குளிசாதன பெட்டியில் வைத்திருந்து, பின் டெல்லியில் பல பகுதிகளில் ஒவ்வொரு துண்டாக வீசியுள்ளார். இது தொடர்பான விசாரணை மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஷ்ரத்தா கொலை சம்பவம் போன்றே மேலும் ஒரு சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது. அதன்படி, ஷ்ரத்தா வால்கர் கொலை வழக்கின் கொடூரமான விவரங்கள் வெளிவரத் தொடங்கிய பிறகு, அடையாளம் தெரியாத உடல் உறுப்புகள் அவளுடையதா என்றும் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் தற்போது அவை பாண்டவ் நகரில் வசிக்கும் அஞ்சன் தாஸ் என்பவருக்கு சொந்தமானது என போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், திருமணம் தாண்டிய உறவில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக, பூனம் மற்றும் அவரது மகன் தீபக் ஆகியோர் சேர்ந்து கணவரை கடந்த ஜூன் மாதம் கொலை செய்துள்ளனர். கணவரை, அவரது மனைவி பூனம் மற்றும் அவரது மகன் தீபக் அவரை கொன்று, அவரின் உடலைத் துண்டு துண்டாக வெட்டி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, பின்னர் கிழக்கு டெல்லியில் பல்வேறு இடங்களில் அவற்றை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிசிடிவி கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், இரவில் தனது கையில் பையுடன் தீபக் நடந்து செல்வது பதிவாகியுள்ளது. அவரது தாயார் பூனம் அவரைப் பின்தொடர்கிறார். பட்டப்பகலில் எடுக்கப்பட்ட வேறொரு வீடியோவில், அவர்கள் உடல் பாகங்களை அப்புறப்படுத்துவதற்காக இடத்தை தேடி அலைவது பதிவாகியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பூனம் மற்றும் அவரது மகன் தீபக்  பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஷ்ரத்தாவின் கொலை சம்பவம் குறித்து அதிர்ச்சி அடங்குவதற்கு, இதுபோன்ற மேலும் ஒரு சம்பவம் நடந்துள்ளது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

pradeep ranganathan dragon AJITH
tn rain news
stalin about BJP
Rohit Sharma and Agarkar
mk stalin rn ravi
PM Modi - Arvind Kejriwal - Rahul Gandhi