vijayawada [File Image]
ஆந்திரப் பிரதேசம் : விஜயவாடா – பிருந்தாவன் காலனியில் வியாபாரி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிருந்தாவன் காலனியில் அந்த நபர் வியாபாரியை அவருடைய மகள் கண்முன்னே வெட்டி கொலை செய்து இருக்கிறார்.
இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமே, வியாபாரியின் மகள் காதல் விவகாரம் தான். பவானிபுரம் செருவு மையத்தைச் சேர்ந்த ஸ்ரீராமச்சந்திர பிரசாத் (வியாபாரி) என்பவர் பிருந்தாவன் காலனியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். இவருடைய மகள் தர்ஷினி இன்ஜினியரிங் மேல்நிலை படித்து கொண்டு வருகிறார். இவர் இன்ஸ்டாவில் வித்யாதரபுரத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் நட்பாக பழகி வந்தார்.
தர்ஷனிக்கும் மணிகண்டனுக்கும் ஏற்பட்ட நட்பு காதலாக மலர, இருவரும் நான்கு வருடங்களாக காதலித்து வந்தனர். இதனையடுத்து, மகளின் காதல் விவகாரம் தந்தை ராமச்சந்திர பிரசாத்துக்கு தெரிய வந்த நிலையில், நன்றாகப் படித்து வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் படிப்பில் கவனம் செலுத்து என மகளை எச்சரித்தார். தந்தை சொல்லை கேட்டு தர்ஷினி மணிகண்டனை சில நாட்கள் ஒதுக்கி வைத்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சிவமணிகந்தா வியாழக்கிழமை ஸ்ரீராமச்சந்திர பிரசாத் பவானிபுரம் வீட்டில் இருந்து தனது மகளை அழைத்து கொண்டு ராமச்சந்திர பிரசாத் சென்றுகொண்டிருந்த நிலையில், மணிகண்டன் திரே சென்று பைக் மீது மோதினார். பின் கீழே விழுந்த ஸ்ரீராமச்சந்திர பிரசாத்தை மணிகண்டன் கையில் வைத்து இருந்த கத்தியை வைத்து கொடூரமாக தாக்கினார். ரோட்டில் விழுந்த தந்தையை அழைத்து வந்து உட்கார வைத்த தர்ஷி.. உடனே மீண்டும் கத்தியால் வெட்டினார்.
காதலி தர்ஷினி கதறி அழுது கெஞ்சியும் கேட்காத மணிகண்டன் தந்தையை கொடூரமாக இறக்கம் இல்லாமல் வெட்டினார். அதன் பிறகு தர்ஷினியை கொலை மிரட்டல் விடுத்தார். தன்னுடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என எச்சரித்துள்ளார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து ஸ்ரீராம்சந்த் ராபிரசாத்தை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது,அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சம்பவ இடத்தை கிருஷ்ணா லங்கா போலீசார் ஆய்வு செய்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…
பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…
சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…
சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…
சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…
பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…