கேரள மாநிலம் கண்ணூர் பகுதியை சார்ந்தவர் பிரணவ்(29) இவரது மனைவி சரண்யா (22) இவர்களுக்கு ஒன்றரை வயதில் வியான் என்ற ஆண் குழந்தை உள்ளது. இருவருக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சரண்யா தனது தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார். கடந்த 2 நாள்களுக்கு முன் பிரணவிற்கு , சரண்யா போன் செய்து தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்பதாகவும் தனது தாய் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளார்.
பின்னர் இரவு பிரணவ் மனைவி தாய் வீட்டிலேயே தங்கி உள்ளார். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது தனது மகன் வியான் காணவில்லை என சரண்யா கூறியதையடுத்து அனைவரும் குழந்தையை தேடியுள்ளனர்.இதுதொடர்பாக கண்ணூர் போலீசாரிடம் புகார் கொடுத்தனர்.
பின்னர் கடந்த 18-ம் தேதி வீட்டின் அருகே உள்ள கடற்கரை பாறையில் வியான் சடலமாக கிடந்தார். இதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் சரண்யா வியானை கொன்றது தெரியவந்தது. விசாரணையில் ஃபேஸ்புக் மூலமாக ஒரு வாலிபருடன் ,சரண்யா விற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அவரை திருமணம் செய்து கொள்ள குழந்தை இடையூறாக இருந்ததால் குழந்தையை கொல்ல முடிவு செய்தேன். கொலை பழியை கணவர் மீது போடவே அவரை தனது வீட்டிற்கு அழைத்ததாக சரண்யா கூறினார். இதையடுத்து போலீசார் சரண்யாவை கைது செய்தனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…