பீகாரில் கட்டி முடித்த ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த பாலம்.!
ரூ. 264 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட பாலம் கனமழையால் தற்போது இடிந்து விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பீகாரில் கோபால்கஞ்ச் பகுதியில் கட்டி முடித்து திறக்கப்பட்ட ஒரே மாதத்தில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக ரூ. 264கோடி செலவில் கந்தக் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வந்த சத்தர்காட் பாலத்தை கடந்த மாதம் 16ம் தேதி தான் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக பீகாரில் பெய்து வரும் கன மழையால் தற்போது இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளது . கட்டி முடித்த ஒரே மாதத்தில் பாலம் இடிந்து விழுந்த சம்பவத்தை தொடர்ந்து எதிர்கட்சிகள் நிதிஷ்குமார் ஆட்சியில் ஊழல் நடந்துள்ளதை இச்சம்பவம் சுட்டிக் காட்டுவதாக காட்டுவதாக குற்றஞ்சாட்டி விமர்சனம் செய்து வருகின்றனர். தற்போது பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.