Bihar Bridge Collapse [file image]
அராரியா: பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட மேம்பாலம் ஒன்று திறக்கும் முன்பே இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் அமைந்துள்ள பக்ரா நதியின் குறுக்கே அதிக பொருட்செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் பாதி கட்டுமான பணியிலேயே இடிந்து விழுந்துள்ளது. இரண்டு பகுதிகளான பிளாக் ஏ மற்றும் பிளாக் பி ஆகியவற்றை இணைப்பதற்கான என மொத்தம் ரூ.7.89 கோடி மதிப்பில் கட்ட பட்ட பாலமானது கட்டப்பட்டு வந்தது.
இந்நிலையில், பாதி கட்டிட பணிகள் முடிந்த நிலையில் இன்று பாலப்பணிகள் நடைபெற்று வரும்போதே இடிந்து விழுந்த சம்பவம் ஆராரியாவின் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் மற்றும் காயம் ஏற்பட்டவர்கள் எத்தனை பேர் என்ற எந்த தகவலும் இப்போது வரை வெளியாகவில்லை.
மேலும் இந்த இடிந்து விழுந்த விபத்தில் யாரேனும் சிக்கியுள்ளார்களா? என்பது பற்றி மீட்பு பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே ரூ.7.89 கோடி செலவில் கட்டப்பட்ட இந்த பாலம் இடிந்து விழுந்து பரபரப்பை ஏற்படுத்தியதை தாண்டி பல சர்ச்சையையும் ஏற்பட்டுள்ளது.
இதனால், இந்த பாலம் எப்படி இடிந்து விழுந்தது? எனவும் தரமற்ற பொருள்களால் இடிந்து விழுந்ததா? என்பது குறித்தும் தீவீர விசாரணையை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த பாலம் இடிந்து விழும் வீடியோவானது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…