திருமணத்தில் மணப்பெண்ணின் காலில் விழுந்த மணமகன்-வியக்கவைக்கும் காரணங்கள்..!

Default Image

சமீபத்தில் நடந்த திருமணம் ஒன்றில் மணமகன் மணப்பெண்ணின் காலை தொட்டு ஆசிர்வாதம் பெறும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய திருமணங்களில் திருமணம் முடிந்தவுடன் மணமகன் காலில் விழுந்து மணப்பெண் ஆசிர்வாதம் பெறும் வழக்கம் பெரும்பான்மையாக இருக்கிறது. அதிலும் இந்து மத திருமணங்களில் இது கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில் வட மாநிலத்தை சேர்ந்த டாக்டர் அஜித் வர்வந்த்கார் என்பவர் அவரின் திருமணத்தின் போது மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும் புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், மணப்பெண்ணின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றதற்கான 9 காரணங்களையும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவை:

  1. எனது பரம்பரையை தொடரப்போறவள்.
  2. என் வீட்டிற்கு செல்வத்தை அளிக்கும் லட்சுமியை அழைத்து வரப்போறவள்.
  3. என் பெற்றோரை அவளது பெற்றோராக மதிக்கபோறவள்.
  4. எனக்கு தந்தை என்னும் ஸ்தானத்தை வழங்கப்போறவள்.
  5. என் குழந்தையை பெற்றெடுக்கும் சமயத்தில் மரணத்தை தொட்டு திரும்பப்போறவள்.
  6. இவள் தான் எனது வீட்டின் அஸ்திவாரம்.
  7. இவளின் நடத்தையால் எனது அடையாளத்தை உருவாக்கபோறவள்.
  8. அவளின் பெற்றோரை விட்டு என்னுடன் வரப்போறவள்.
  9. அவளின் அன்புக்குரியவர்களிடம் இருந்து பிரிந்து இனி என்னுடன் பயணிக்கப்போறவள்.

இத்தனை செய்யும் பெண்ணுக்கு நான் மரியாதை செய்வதில் வெட்கப்பட ஒன்றுமில்லை. இவ்வாறு மணமகன் தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்