உத்தரபிரதேச மாநிலத்தில் பிரதாப்கர் மாவட்டத்தில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு ஹசீனா எனும் கிராமத்தை சேர்ந்த ஒருவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் திருமணம் சாதாரணமாக நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணத்தின் போது நடைபெற்ற மெழுகுவர்த்தி ஒளிரச்செய்யும் நிகழ்வின் பொழுது மணமகன் மற்றும் மணமகள் உறவினர்கள் அதிக அளவு குடிபோதையில் இருந்துள்ளனர்.
திருமண நாளன்றே மணமகன் அதிக குடிபோதையில் தடுமாறியதை கண்டு மணமகள் குடும்பத்தினர் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மணமகன் மணமகளை தன்னுடன் நடனமாட அழைத்தது மட்டுமல்லாமல் உறவினர்கள் சிலர் மணமகளிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சித்துள்ளனர். இதனையடுத்து மணமகள் தன்னுடைய திருமணத்தை நிறுத்துமாறு குடும்பத்தினரிடம் கேட்டுக்கொண்டுள்ளார். உடனடியாக மணமகளின் சொல்லை கேட்டு திருமணத்தை நிறுத்திய குடும்பத்தினர், மணமகன் குடும்பத்திற்கு மணமகள் குடும்பத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட நகைகள் மற்றும் பரிசுகள் அனைத்தும் திருப்பித் தருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
உடனடியாக மணமகன் குடும்பத்தினர் மணமகள் குடும்பத்தினரை சமாதானம் செய்ய காவல்துறையினர் உதவியை நாடியுள்ளனர். காவல்துறையினர் மணமகள் குடும்பத்தினரை எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் அவர்கள் திருமணத்தை நிறுத்தியாக வேண்டும் என்ற ஒற்றை முடிவில் இருந்துள்ளனர். மேலும், மணமகள் காவல்துறையிடம் மணமகன் மட்டுமல்லாமல் அவரது உறவினர்கள் தன்னிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கின்றனர் எனவும் குற்றம் சாட்டியதையடுத்து காவல்துறையினர் மணமகன் குடும்பத்தினரிடம் பேசி மணமகள் குடும்பத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட அனைத்தையும் திருப்பி கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…