கேரளாவில் தேர்வு எழுதுவதற்காக வந்திருந்த காதலியின் கழுத்தை அறுத்து காதலன் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்திலுள்ள கோட்டையம் எனும் மாவட்டத்தை சேர்ந்த 22 வயதுடைய இளம் பெண் நிதினா சென்ட் தாமஸ் கல்லூரியில் படித்து வருகிறார். இன்று தேர்வு எழுதுவதற்காக கல்லூரிக்கு சென்ற நிதினா தேர்வு எழுதிவிட்டு வெளியே வந்துள்ளார். அப்பொழுது வள்ளிச்சீரா பகுதியை சேர்ந்த அபிஷேக் என்பவரும் அதே தேர்வு மையத்தில் தேர்வு எழுதி முடித்து விட்டு வெளியே வந்து அமர்ந்துள்ளார்.
இவர் நிதினாவுக்காக காத்திருந்ததாகவும், நிதினாவை இவர் ஒரு தலையாக காதலித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நிதினா தேர்வு எழுதி முடித்து விட்டு வந்தனாவுடன் அபிஷேக் நிதினாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட தொடங்கியுள்ளார். அதன் பின்பாக பேப்பர் கட்டரை கொண்டு நிதினாவின் கழுத்தை அறுத்து உள்ளார். இதனால் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அப்பெண்ணை அருகில் இருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இளம் பெண்ணின் கழுத்தை அறுத்து கொலை செய்த அபிஷேக் அவ்விடத்திலேயே அமர்ந்த்து இருந்துள்ளார். அதன் பின் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். காதல் விவகாரம் தொடர்பாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடின. டாஸ்…
மும்பை : ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகின்றன.…
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி நேற்று (மார்ச் 30) நாக்பூர் பயணம் மேற்கொண்டது, இந்த பயணத்தில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்திற்கு…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சியின் நிறுவனரும், 2018 முதல் 2022 வரை பாகிஸ்தானின் பிரதமராக பதவி வகித்தவருமான…
மும்பை : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதி…
மும்பை : ஐபிஎல் 2025-ல் இன்று (மார்ச் 31) மும்பை இந்தியன்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மும்பையின்…