திருமணம் செய்ய மறுத்த காதலன்…பிறப்புறுப்பை வெட்டிய பெண் மருத்துவர்!

பீகார் : மாநிலம் சரண் மாவட்டத்தில் காதலனின் அந்தரங்க உறுப்பை அறுத்த பெண் ஒருவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார். அந்த பெண் (பாதிக்கப்பட்ட) விகாஸ் சிங் என்பவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஹாஜிபூரில் வசிக்கும் அந்த பெண், டாக்டராகவும், மதுராவில் பயிற்சி பெற்று வந்து இருக்கிறார்.
இருவரும் காதலித்து வந்த நிலையில், பெண் மருத்துவர் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து அவரிடம் பேசி இருக்கிறார். ஆனால், விகாஸ் சிங் மறுத்துக்கொண்டே இருந்திருக்கிறார். இறுதியாக கடந்த, திங்கட்கிழமை, இருவரும் சரணின் சாப்ராவில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் தங்கள் திருமணத்தை பதிவு செய்யவிருந்தனர்.
ஆனால், கடைசி நேரத்தில், அந்த நபர் பின்வாங்கினார். இதையடுத்து, ஆத்திரம் அடைந்த அந்த பெண் பிரகாஷை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். அங்கு வந்த அவரை தாக்கி, அவரது அந்தரங்க உறுப்பை வெட்டியதாக போலீசார் தெரிவித்தனர். அந்த நபரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்துள்ளனர்.
பிறகு காவல்துறையினருக்கு தகவலை கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பலத்த காயம் அடைந்த நபரை மீட்டு பாட்னாவில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். பின், இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட பெண் மருத்துவர் மீது தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமணத்திற்கு மறுத்ததால் பெண் மருத்துவர் இப்படி ஒரு செய்யலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025