மஹாராஷ்டிரா: சமீபத்தில் மகாராஷ்டிராவில் அமைந்துள்ள தானே மாவட்டத்தில் உள்ள துணை மாவட்ட மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 9 வயது சிறுவனுக்கு தவறுதலாக விருத்தசேதனம் செய்யப்பட்டதாக அச்சிறுவனின் பெற்றோர் கடந்த வியாழக்கிழமை புகார் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த சிறுவனின் தாயார் பேசுகையில், “ஷாஹாபூரில் உள்ள ஒரு குடிமைப் பள்ளியில் எனது மகன் நான்காம் வகுப்பு படித்து வருகிறான். இந்த ஆண்டின் மே மாதத்தின் கடைசி வாரத்தில், என் மகன் பள்ளிக்குச் சென்று காலில் காயத்துடன் திரும்பி வந்தான்.
என் மகனிடம் விசாரித்த போது அவனும் அவனது வகுப்பு தோழர்களும் விளையாடும் பொழுது இடது காலில் தவறுதலாக கல் பட்டு காயம் ஏற்பட்டதாக தெரியவந்தது. இதனால் என் மகனை துணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம்.
அங்கு என் மகனுக்கு, மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். அதன்பின் வீடு வந்த பிறகு காயம் ஏற்பட்ட இடத்திலிருந்து சீழ் வெளியேற தொடங்கியது. எனவே, மீண்டும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம் அங்கு அவரை சிகிச்சை செய்த மருத்துவர் காயம் ஆழமாக பட்டுள்ளதால் இதற்கு அறுவை சிகிச்சையை பரிந்துரைத்தனர்.
இதனால், கடந்த ஜூன் 15-ம் தேதி, சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்தோம் பின் ஜூன் 17-ம் தேதி அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன் பிறகு அறிவித்த நாளில் என் மகனுக்கு அறுவைசிகிச்சை நடந்து ஆபரேஷன் தியேட்டரில் இருந்து வெளியே கொண்டு வந்தார்கள்.
அப்போது தான் அவர்கள் காலில் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சையை மாற்றி, விருத்தசேதனம் செய்ததை அறிந்தேன். இதை பற்றி மருத்துவர்களிடம் கேட்ட போது, அவர்கள் மீண்டும் உடனே என் மகனை உள்ளே அழைத்துச் சென்று சரியாக காலில் ஆபரேஷன் செய்தனர்.
இது குறித்து மருத்துவர்களிடம் மேற்கொண்டு கேட்ட போது, அவர்கள் அலட்சியமாக இதே வயதில் வேறு சிறுவர்கள் இருந்ததால் குழப்பம் அடைந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள்.
மேலும், உங்கள் மகனுக்கும் ஆணுறுப்பில் தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த விருத்தசேதனம் அறுவை சிகிச்சையால் நல்லதுதான் செய்திருக்கிறோம் என தவறையும் ஒப்புக்கொள்ளாமல் சமாளிக்கின்றனர்” என கூறினார்.
மேலும் இது தொடர்பாக காவல் துறைக்கு புகார் அளித்ததன் பெயரில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மேலும், தானே சிவில் மருத்துவமனையின் சிவில் சர்ஜன் டாக்டர் கைலாஸ் பவார் மேற்பார்வையில் விசாரணை தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவம் மருத்துவத்துறையின் அலட்சியத்தை காட்டுவதோடு சற்று பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…