தற்கொலை செய்துகொள்ள ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் அனுமதி கேட்ட சிறுவன்!
பீகார் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன். தற்போது ஜார்க்கண்டில் வாழ்ந்து வருகிறார். இவருடைய தந்தை ஒரு அரசு அதிகாரி வேலை செய்து வருகிறார். இவரது தாய் பாட்னாவில் உள்ள ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறார்.
இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் , எனது தான் எனது அப்பா அம்மா இருவரும் சண்டை போட்டு வருகின்றனர். இதனால் எனது படிப்பு பாதிப்படைகிறது. எனது அப்பாவிற்கு புற்றுநோய் உள்ளது. எனது அம்மாவின் உத்தரவின் பேரில் சமூக விரோதி சக்திகளால் எனது அப்பாவின் அச்சுறுத்துதல் ஏற்படுத்துகிறது. இதுபோன்ற சூழலில் நான் வாழ விருப்பமில்லை நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதி கொடுங்கள் என கூறி இருந்தான்.
இந்நிலையில் இந்த சிறுவனின் கடிதத்தை பிரதமர் அலுவலகத்திற்கு ஜனாதிபதி மாளிகையை அனுப்பி வைத்தது அதன் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் கேட்டுக் கொண்டது. இதையடுத்து பிரதமர் அலுவலகத்தின் பேரில் பாகல்பூர் மாவட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.