உத்தரபிரதேச மாநிலம் பாரபங்கி பகுதியைச் சேர்ந்த 14 வயது ஃபர்மான் என்ற சிறுவன் ரீல்ஸ் மோகத்தில் ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது அவர் தண்டவாளத்தை நெருங்கியபோது, வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியது. இந்த மோதலில் அங்கிருந்து தூக்கி வீசப்பட்ட ஃபர்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதனையடுத்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். பிறகு இறந்த சிறுவன் உத்தரபிரதேச மாநிலம் ஜஹாங்கிராபாத்தில் உள்ள தேரா தௌலத்பூரில் வசிக்கும் முன்னா என்பவரின் மகன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த நிலையில் சிறுவனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதன்பிறகு ஃபர்மானின் குடும்ப உறுப்பினர்களுக்கு இந்த சம்பவம் குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்களும் வந்தனர். ஃபர்மான் தனது நண்பர்கள் ஷுஐப், நாதிர் மற்றும் சமீர் ஆகியோருடன் அருகில் ஒரு ஊர்வலத்தைக் காணச் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தாமேதர்பூர் கிராமத்தை ஒட்டியுள்ள ரயில் தண்டவாளத்தில் நின்று ரீல்ஸ் எடுக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. தற்போது, இந்த சம்பத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் தனது மனைவி துர்கா ஸ்டாலின் உடன் பொங்கல்…
இந்தியாவில் நடைபெறும் மகா கும்பமேளாவின் முக்கியத்துவம் பற்றியும் அதன் வரலாற்றைப் பற்றியும் இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :12…
இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 2 நாட்கள் நடைபெறும் பெண்கல்வி குறித்த மாநாடு தொடங்கியுள்ளது. இஸ்லாமிய நாடுகளில் உள்ள…
தினமும் தலைக்கு எண்ணெய் தேய்த்தால் முடி வளருமா என்றும், எண்ணெய் வைக்கவில்லை என்றால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றியும் இந்தச்செய்தி குறிப்பில்…
சென்னை :பாரம்பரிய மிக்க சுவையில் பொங்கல் செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; பச்சரிசி=…
துபாய் : நடிகர் அஜித் குமார் சினிமாவை அடுத்து பைக், கார் பந்தயங்களில் அதீத ஈடுபாடு கொண்டுள்ளவர். தற்போது துபாயில்…