கனடாவில் கொல்லப்பட்ட இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என தகவல்.
கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்ட 21 வயதான இந்திய மாணவன் கார்த்திக் வாசுதேவின் உடல் நாளை டெல்லிக்கு கொண்டு வரப்படும் என்று அவரது தந்தை ஹிதேஷ் வாசுதேவ் தெரிவித்ததாக தகவல் கூறப்படுகிறது. இந்த கொலை தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞரை பணியமர்த்துமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாகவும் டொராண்டோ காவல்துறை கூறியுள்ளது என்றும் இதன் காரணமாக அடுத்த விசாரணை ஏப்ரல் 20 ஆம் தேதி நடைபெறும் எனவும் மாணவனின் தந்தை கூறினார்.
கடந்த 7-ஆம் தேதி வியாழக்கிழமை மாணவன் கார்த்திக் வாசுதேவ், மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து இறங்கி பேருந்தைப் பிடித்து பகுதிநேர பணிக்காக டோரண்டோ சென்று கொண்டிருக்கும் போது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால், இந்த கொலைக்கான காரணம்ப ற்றி தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இறந்த மாணவனின் உடல் உடலை தாய்நாட்டுக்கு அனுப்புவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம் என்று டொராண்டோ காவல்துறை தெரிவித்த நிலையில், உடல் நாளை தாயகம் கொண்டுவரப்படுகிறது.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…