வயநாடை அச்சுறுத்திய ஆட்கொல்லி புலி சடலமாக கண்டெடுப்பு!

வயநாடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்த ஆட்கொல்லி புலி, இன்று காலை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

kerla tiger

கேரளா : வயநாடு மானந்தவாடி பஞ்சரகோலியில் ராதா என்ற பெண் தேயிலை தோட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பொழுது, எதிர்பாராம அங்கு வந்த ஆண்புலி கடித்து கொன்றது. இதையடுத்து, அந்த புலியை உயிருடனோ அல்லது சுட்டுப்பிடிக்கவோ நடவடிக்கை எடுக்க மாநில அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில், மானந்தவாடி நகராட்சியின் சில பகுதிகளில் நேற்றைய தினம் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி, புலியை சுட்டுப் பிடிக்க மாநில வனத்துறை முடிவு செய்து தேடிவந்த நிலையில், நேற்று காலை தேடுதல் குழுவினரை புலி தாக்கிய போது சுடப்பட்டது.

எனினும், அங்கிருந்து புலி தப்பியது. இன்று காலை அங்குள்ள வீட்டின் பின்புறம் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.  பின்னர், அந்த புலி ராதாவை கொன்ற அந்த மனித உண்ணும் புலிதான் (ஆட்கொல்லி புலி) என வனத்துறை அலுவலகம் உறுதி செய்துள்ளது.

இன்று அதிகாலை 2.30 மணியளவில் பிரியதர்ஷினி எஸ்டேட் அருகே உள்ள காட்டுப் பகுதியில் சடலம் கண்டெடுக்கப்பட்டது. உடலில் இருந்த காயமே புலியின் மரணத்திற்கு காரணம் என முதற்கட்ட தகவலில் தெரிய வந்துள்ளது. மற்றொரு பக்கம், இது மற்றொரு புலியுடன் மோதியதில் இறந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

எனினும், மரணத்திற்கான காரணத்தை அறிய விரிவான பிரேதப் பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இப்பொது, இறந்த புலியின் உடலை உடற்கூராய்வு செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்