இன்று மாலை தகனம் செய்யப்படுகிறது சுஷ்மா சுவராஜ் உடல்
முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மாரடைப்பு காரணமாக நேற்று இரவு உயிரிழந்தார்.இவருக்கு வயது 67 ஆகும். இதனையடுத்து இவரது உடல் டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
சுஷ்மாவின் மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.குடியரசு தலைவர் ,பிரதமர் உள்ளிட்டோர் நேரில் சென்றும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதற்கு பின்னர் சுஷ்மாவின் உடல் பாஜக தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.இதன் பிறகு 3 மணிக்கு மின் மயானத்தில் சுஷ்மா உடல் எரியூட்டப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.