100க்கும் மேற்பட்ட குத்துகாயங்களுடன் கண்டறியப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையின் சடலம்!

Default Image

100க்கும் மேற்பட்ட குத்துகாயங்களுடன் போபாலில் கண்டறியப்பட்ட பிறந்து இரண்டு நாளே ஆன குழந்தையின் சடலம்.

மத்திய பிரதேசத்தின் தலைநகரமாகிய போபாலில் உள்ள அயோத்தி என்னும் நகரில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பதாக பிறந்து 2 நாட்களே ஆன ஒரு சிறுமியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழந்தையின் மார்புப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் ஏகப்பட்ட குத்து காயங்களுடன் காயங்கள் இருந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் பிறந்து 2 நாட்களே ஆன பெண் குழந்தை இறந்து கிடந்தது குறித்து விசாரித்த பொழுது கடந்த இரு தினங்களுக்கு முன்பு காலையில் பிறந்த குழந்தை எனவும் அயோத்தி நகரில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளிக்கு முன்னால் உள்ள ஒரு கோவிலுக்கு அருகில் இந்த பெண் குழந்தை கிடந்ததாகவும் தகவல் கிடைத்தது என போலீசார் கூறியுள்ளனர்.

சால்வையால் போர்த்தப்பபட்டிருந்த குழந்தையை போலீஸ் அதிகாரிகள் பரிசோதித்து பார்த்த பொழுது நூற்றுக்கும் மேற்பட்ட குத்துக் காயங்கள் இருப்பதை அவர்கள் அறிந்து உடனடியாக குழந்தையின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பியுள்ளனர். பிரேத பரிசோதனை முடிந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இரவு நேரத்தில் குழந்தை கோவிலுக்கு அருகில் வீசப்பட்டதால் மிருகத்தால் காயம் அடைந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் மேலும் பரிசோதித்து பார்த்தபோது ஒரு சிறிய ஸ்க்ரூட்ரைவர் அல்லது கம்பி போன்ற கடினமான பொருட்களால் பலமுறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பிறந்து 2 நாட்களே ஆன இந்த குழந்தைக்கு நேர்ந்த கொடுமையை கண்டு போலீசார் அடையாளம் தெரியாத குற்றவாளி மீது இந்திய தண்டனை சட்டத்தின்படி ஐபிசி பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யதுள்ளனர். தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தையின் பெற்றோர் யார்? குழந்தையை இவ்வாறு சித்திரவதை செய்தது யார்? என விசாரணை நடை பெற்று வருகிறது. மேலும் அந்த கோவிலை சுற்றி உள்ள பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள கட்சிகளின் அடிப்படையில் தற்போது போலீஸார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்