காரில் எரிந்த நிலையில் இருவரின் உடல்கள்.. ஒருவர் கைது – ராஜஸ்தான் முதல்வர் கண்டனம்!
ராஜஸ்தானை சேர்ந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் கண்டனம்.
ராஜஸ்தானின் மாநிலம் பரத்பூர் மாவட்டத்தில் வசித்து வந்த நசீர் (25 வயது) மற்றும் ஜுனைத் (35 வயது) ஆகியோரை காணவில்லை என போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த சமயத்தில் ஹரியானா மாநிலத்தில், பிவானி மாவட்டத்தில் காலை மஹிந்திரா பொலிரோ வாகனத்தில் இரண்டு பேரின் சடலங்கள் உடல் முழுவதும் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.
இதனை கண்டறிய குடும்பத்தார் வரவழைக்கப்பட்ட நிலையில், இந்த கார், ஜுனைத் , நசீருக்கு தெரிந்த நபருடைய கார் தான் உறுதிபடுத்தினர். மேலும், டிஎன்ஏ மற்றும் உடற்கூறாய்வு சோதனை செய்து இவர்கள் தான் என்பதை உறுதிப்படுத்தும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், அரியானாவில் காரில் எரிந்த நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் காவல்துறை இணைந்து செயல்படுவதாகவும் கூறினார். இதற்கிடையில், இறந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்த ராஜஸ்தான் அமைச்சர் ஜாஹிதா கான், அவர்களுக்கு ரூ .20.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று கூறினார்.