கேரளாவில் கடந்த சில நாள்களாக தென் மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. இதனால் கடந்த 8 தேதி முதல் வெள்ளத்தில் மற்றும் நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 88 அதிகரித்து உள்ளது.
இந்நிலையில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இறந்த இரு சகோதரிகளின் உடல்கள் கட்டி அணைந்த நிலையில் மீட்கப்பட்டன. கேரளாவில் காவலப்பராவில் உள்ள முத்தப்பங்குன்னு மலையில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.
அங்கு 2 மாத குழந்தை உட்பட 5 குழந்தைகளுடன் வசித்து வந்த விக்டர் மற்றும் தோமாவின் வீடு மிகவும் சேதமடைந்தது.இதில் அனகா (8) மற்றும் அலீனா(4) என்ற சகோதரிகள் சிக்கி கொண்டனர்.இவர்களின் தந்தை விக்டர் குழந்தைகளின் அழு குரல் கேட்டு மீட்க கடுமையாக போராடினார்.
ஆனால் அவரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.இடிபாடுகளில் சிக்கிய இரு சகோதரிகளின் உயிர் ஒன்றாக பிரிந்தது. எப்போதும் ஒன்றாக கட்டிப்பிடித்து உறங்கும் இந்த சகோதரிகளின் உயிர் இருவரும்ஒன்றாக பிரிந்தது .
திருப்பதி : ஆந்திர பிரதேச மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை (ஜனவரி 10) முதல் ஜனவரி 19ஆம் தேதி…
சத்தீஸ்கர்: சத்தீஸ்கரின் முங்கேலி மாவட்டத்தில் இரும்பு ஆலையில் புகைபோக்கி இடிந்து விழுந்ததில் சில தொழிலாளர்கள் காயமடைந்தனர் என்றும், பலர் விபத்தில்…
ஹைதராபாத்: ஹைதராபாத்தின் செர்லப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக, அதிநவீன வசதிகளுடன் கூடிய 'ஸ்லீப்பிங் பாட்'…
சென்னை : தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கருத்துக்கள் தற்போது…
ஆந்திரப் பிரதேசம்: வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு நிகழ்விற்கான இலவச தரிசன டோக்கன்களை வாங்க, நேற்று இரவு அதிகளவில்…
சென்னை :இந்த மார்கழி மாதம் கிடைக்கக்கூடிய காய்கறிகளில் ஏதேனும் ஏழு வகை காய்கறிகளைக் கொண்டு கூட்டு செய்வது எப்படி என…