பாஜகவின் வருவாய் 50% உயர்ந்துள்ளது; மக்களாகிய உங்கள் வருவாய்…? ராகுல் காந்தி கேள்வி!
கடந்த நிதியாண்டில் பாஜகவின் வருவாய் 50% உயர்ந்துள்ளது, மக்களாகிய உங்கள் வருவாய் எவ்வளவு உயர்ந்துள்ளது என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களாட்சி சீர்திருத்தங்களுக்கான சங்கம் என்கிற அமைப்பு இந்திய அரசியலில் நம்பகத்தன்மையை உறுதி செய்து தேர்தலில் பணம் ஆதிக்கம் செலுத்தப்படுவதை கண்காணித்து ஆண்டுதோறும் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதன்படி, கடந்த நிதியாண்டில் அரசியல் கட்சிகளுக்கு கிடைத்த வருமானம் மற்றும் தேர்தல் செலவினங்களை ஆய்வு செய்து ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது.
அதில் பாஜகவின் சொத்து மதிப்பு கடந்த நிதியாண்டில் ரூ.3,623 கோடி அளவிற்கு உயர்ந்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 50% அதிகம். இதில் பெரும்பாலானவை தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடையாக கிடைத்துள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, தேர்தல் நிதி பாத்திரங்கள் மூலமாக பாஜகவின் வருவாய் வசூல் 50% அதிகரித்துள்ளது. ஆனால் மக்களாகிய உங்களுக்கு வருவாய் உயர்ந்துள்ளதா? என கேள்வி எழுப்பியுள்ளார். இதோ அந்த பதிவு,
BJP’s income rose by 50%.
And yours?BJP की आय 50% बढ़ गयी।
और आपकी? pic.twitter.com/Q5HEISACDJ— Rahul Gandhi (@RahulGandhi) August 28, 2021