பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருகையில் மத்தியில் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜக_வும் , காங்கிரஸ் கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவுகின்றது.மாநிலத்துக்கு மாநிலம் மாநில கட்சிகளுடன் கூட்டணி குறித்த வியூகங்களை வகுத்து வருகின்றனர்.
இந்நிலையில் , மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக-சிவசேனா கூட்டணி ஆட்சி செய்து வருகின்ற சூழலில் கடந்த சில நாட்களாக மத்திய அரசை கடுமையாக எதிர்த்தது.இதனால் இவர்களுக்குள் மீண்டும் கூட்டணி அமையுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக 25 தொகுதியிலும், சிவசேனா 23 தொகுதியில் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற இருக்கும் சட்ட மன்ற தொகுதியில் இரு கட்சிகளும் சம அளவிலான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக உத்தவ் தாக்ரேவும், அமித்ஷாவும் கூட்டாக அறிவித்தனர் .
இதையடுத்து சிவசேனா கட்சியின் M.P சஞ்சய் ராவத் மும்பையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் பாராளுமன்ற தேர்தலில் கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைவிட 100 இடங்கள் குறைவாக பெற்றால் பிரதமரை பாஜக தீர்மானிக்க கூடாது.கூட்டணி கட்சிகள் தான் தீர்மானிக்க வேண்டுமென்றும் , மோடியை நாங்கள் பிரதமராக முன்னிறுத்தவில்லை என்று தெரிவித்துள்ளார்.இதனால் பாஜக தரப்பு அதிர்ப்தியடைந்துள்ளது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…