#BiharElectionResults : ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட பாஜக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை
பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
243 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட பீகாரில் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது.நிதிஷ் குமார் மற்றும் தேஜஸ்வி யாதவ் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.ஆர்ஜேடி – காங்கிரஸ் – கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் கூட்டணி, மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) என்றும், பாஜக மற்றும் ஜே.டி.யு. கட்சி கூட்டணியின் பெயர், தேசிய ஜனநாயக கூட்டணி என்று அழைக்கப்படுகிறது.
தற்போதைய நிலவரப்படி தேர்தல் ஆணையம் இணையத்தில் வெளியிட்டுள்ள தகவலின்படி ,ராஷ்ட்ரிய ஜனதாதளம்-காங்கிரஸ் கூட்டணி 99 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஐக்கிய ஜனதாதளம்-பாஜக கூட்டணி 130 இடங்களில் முன்னிலையில் உள்ளது.பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.
மகாகத்பந்தன் கூட்டணி (Mahagatbandhan) முன்னிலை நிலவரம் :
ராஷ்ட்ரிய ஜனதாதளம் – 60
காங்கிரஸ் – 20
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்)-13
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி -3
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 3
தேசிய ஜனநாயக கூட்டணி (National Democratic Alliance ) முன்னிலை நிலவரம் :
ஐக்கிய ஜனதாதளம்- 53
பாஜக – 70
விகாஷில் இன்சான் (Vikassheel Insaan Party)- 6
ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) -1