ஊழியர்களுக்கு கைகொடுத்துவிட்டு கையை துடைத்தாரா ராகுல்காந்தி.? பாஜக குற்றசாட்டு.! காங்கிரஸ் பதிலடி.!
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தனது ஊழியர்களுக்கு கைகொடுத்துவிட்டு கையை துடைத்ததாக பாஜக குற்றம் சாட்டியது. அதற்கு காங்கிரஸ் தரப்பு பதில் கூறி விமர்சனம் செய்துள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி 2019ஆம் ஆண்டு கர்நாடக பிரச்சாரத்தில் பேசுகையில், மோடி பெயர் குறித்து அவதூறு விளைவிக்கும் விதமாக பேசியதாக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கில் 2 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார் ராகுல்காந்தி. அதனை தொடர்ந்து அவரது எம்பி பதவியில் இருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதனால், அவர் டெல்லியில் வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்ய நோட்டீஸ் அவருக்கு வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் அவர் டெல்லியில் ராகுல்காந்தி வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்து சாவியை அரசு அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அப்போது அரசு பங்களாவை வேலை பார்த்த ஊழியர்களுடன் கைகுலுக்கி புகைப்படம் எடுத்து கொண்டார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வந்தது.
இந்த விடியோவை குறிப்பிட்டு பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியா சமூக தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், அரசு பங்களாவை காலி செய்யும் போது வீட்டு ஊழியர்களிடம் கைகுலுக்கிவிட்டு ராகுல்காந்தி தனது பேண்டில் கையை துடைத்ததாக குற்றம் சாட்டி வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில், இந்த ஆண்கள்/பெண்கள் என ஊழியர்கள் அனைவரும் அவருக்கு பல ஆண்டுகளாக சேவை செய்திருக்க வேண்டும். அவர்களிடம் ராகுல்காந்தி அலட்சியமாக நடந்து கொள்கிறார் என பதிவிட்டு இருந்தார்.
Rahul Gandhi wipes his hand (on pants) after shaking hands with his house staff. These men/women must have served him over the years. Such disdain… pic.twitter.com/tEPPkeCP1Y
— Amit Malviya (@amitmalviya) April 22, 2023
இதுகுறித்து காங்கிரஸ் தேசிய ஒருங்கிணைப்பாளர் நிதின் அகர்வால் தனது டிவிட்டர் பக்கத்தில், ஒட்டி வெட்டப்பட்ட வீடியோவை பரப்பியதாக குற்றம் சாட்டினார். மேலும், இந்த வீடியோ எடிட் செய்யும் சமயத்தில் உங்கள் நேரம் வீணாகவில்லையா? காலையில் எழுந்து வீடியோவை எடிட் செய்து, அதை பாதியாக வெட்டி, உங்கள் தலைவரை மகிழ்விக்க நாள் முழுவதும் அனைத்து இடங்களிலும் பரப்புங்கள் என பதிவிட்டுள்ளார்.