Cow Accident [file image]
மத்திய பிரதேசம் : சாகரில், நள்ளிரவில், அதிவேகமாக வந்த பைக், நடுரோட்டில் அமர்ந்திருந்த மாடுகள் மீது மோதியதில், பைக் ஓட்டியவரும், கன்றும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வெளிவந்த தகவலின்படி, இந்த விபத்தில் இறந்தவர் சாகர் பகுதியைச் சேர்ந்த ஹிமான்ஷு மிஸ்ரா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள பிரதான் சௌரா குழுமத்தின் அலுவலகம் முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது.
இது தொடர்பான அந்த அதிர்ச்சி வீடியோ காட்சியில் ” மாடுகள் கூட்டமாக நடுரோட்டில் அமர்ந்துகொண்டும், நின்றுகொண்டும் இருந்தது. அந்த பகுதியில் வேகமாக வந்த ஹிமான்ஷு மிஸ்ரா மாடு இருப்பதை கூட கவனிக்காமல் மிகவும் வேகமாக வந்து கன்றுக்குட்டி மீது மோதினார். இதில் அந்த கன்று குட்டி பறந்து விழுந்தது.
நிலை தடுமாறிய ஹிமான்ஷு மிஸ்ரா கீழே விழுந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அந்த கன்று குட்டியும் அசைவில்லாமல் இருந்த நிலையில், உயிரிழந்ததாக தெரிகிறது. அதேசமயம், பயந்துபோன மற்ற மாடுகள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தன.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…