அதிவேகமாக பைக்கில் வந்த நபர்! மாடுகள் மீது மோதி உயிரிழந்த சோகம்…

Cow Accident

மத்திய பிரதேசம் : சாகரில், நள்ளிரவில், அதிவேகமாக வந்த பைக், நடுரோட்டில் அமர்ந்திருந்த மாடுகள் மீது மோதியதில், பைக் ஓட்டியவரும், கன்றும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும், ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வெளிவந்த தகவலின்படி, இந்த விபத்தில் இறந்தவர்  சாகர் பகுதியைச் சேர்ந்த ஹிமான்ஷு மிஸ்ரா (24) என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாவட்டத்தில் உள்ள பிரதான் சௌரா குழுமத்தின் அலுவலகம் முன்பாக இந்த விபத்து நடந்துள்ளது.

இது தொடர்பான அந்த அதிர்ச்சி வீடியோ காட்சியில் ” மாடுகள் கூட்டமாக நடுரோட்டில் அமர்ந்துகொண்டும், நின்றுகொண்டும் இருந்தது. அந்த பகுதியில் வேகமாக வந்த ஹிமான்ஷு மிஸ்ரா மாடு இருப்பதை கூட கவனிக்காமல் மிகவும் வேகமாக வந்து கன்றுக்குட்டி மீது மோதினார். இதில் அந்த கன்று குட்டி பறந்து விழுந்தது.

நிலை தடுமாறிய ஹிமான்ஷு மிஸ்ரா கீழே விழுந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்தில் அந்த கன்று குட்டியும் அசைவில்லாமல் இருந்த நிலையில், உயிரிழந்ததாக தெரிகிறது. அதேசமயம், பயந்துபோன மற்ற மாடுகள் அங்கிருந்து ஓட ஆரம்பித்தன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்