கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இலவச தக்காளி கிடைக்கும்…!
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இலவசமாக 2 கிலோ தக்காளி வழங்கப்படும் என்று கர்நாடகவின் பிஜாப்பூர் மாநகராட்சி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2 வது அலையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளது.மேலும்,ஒவ்வொரு நாளும் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.இதனால் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாகக் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.
அதே சமயத்தில்,கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் இறப்பு ஏற்படும் மற்றும் உடல்நிலை பாதிக்கப்படும் போன்ற சில வதந்திகளால் வடமாநிலத்தில் உள்ள மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சப்படுகின்றனர்.
இந்த நிலையில்,கர்நாடக மாநிலத்தின் பிஜாப்பூர் மாநகராட்சியானது,கொரோனா தடுப்பூசி மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்பவர்களுக்கு இரண்டு கிலோ தக்காளி இலவசமாக வழங்கப்படும் என்றும்,மேலும்,தடுப்பூசி போட்டுகொள்பவர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அறிவித்துள்ளது.
மக்கள் கொரோனா தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் வகையில்,இந்த வித்தியாசமான முயற்சியை செய்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.