கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணிவது தொடர்பாக தொடர்ச்சியாக சர்ச்சை கிளம்பி வந்த நிலையில், இதனை அடுத்து கர்நாடகாவில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களை பள்ளிக்கு பைபிள் கொண்டு வர வேண்டும் என பெற்றோரிடம் அனுமதி கேட்டபோது புது சர்ச்சை வெடித்தது.
இந்நிலையில் இது தொடர்பாக கர்நாடக கல்வித் துறை அமைச்சர் வி சி நாகேஷ் அவர்கள் கூறுகையில், பைபிளும் குரானும் மதநூல்கள். மதத்தை நம்புபவர்கள் அந்தந்த மத நூல்களைப் படிக்க வேண்டும் என்று சொல்கிறது. ஆனால் பகவத் கீதை மதத்தை பற்றி பேசவில்லை. வாழ்க்கை நடைமுறைக்குத் தேவையான குறிப்புகளை கூறுகிறது.
எனவே பைபிள் மற்றும் குரான் போன்ற பிற மத நூல்களுடன் பகவத் கீதையை ஒப்பிட முடியாது. சுவாமி விவேகானந்தர் மற்றும் சிலர் இயேசுவின் வாழ்க்கை முறைகளை கற்பித்தது போல நீங்கள் கற்பிக்கலாம். ஆனால் மாணவர்கள் மீது மத உரையை திணிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…