240 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்ற பாஜக!
மக்களவை தேர்தல் : 2024 பொதுத் தேர்தலில் 240 இடங்களை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி (பாஜக) 36.56% வாக்கு சதவீதத்துடன் (23,59,73,935 வாக்குகள்) மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
பாஜகவிற்கு அடுத்ததாக காங்கிரஸ் 21.19% வாக்கு சதவீதத்துடன் (13,67,59,064 வாக்குகள்) பெற்று இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளது.
சமாஜ்வாதி கட்சி (SP) 4.58% வாக்கு சதவீதத்தையும், திரிணமூல் காங்கிரஸ் (TMC) 4.37% வாக்கு சதவீதத்தையும் பெற்றது. வைஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி (YSRCP) 2.06% வாக்கு சதவீதமும், பகுஜன் சமாஜ் கட்சி (BSP) 2.04% வாக்கு சதவீதமும் பெற்றுள்ளனர்.