திட்டமிட்டப்படி ஏப்ரல் 1 முதல் வங்கிகள் இணைப்பு அமலுக்கு வரும் – நிர்மலா சீதாராமன்

Default Image

வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி அடுத்த மாதம் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பொதுத்துறை வங்கிகளை இணைத்து அவற்றின் எண்ணிக்கையை குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே எஸ்பிஐ-யுடன் அதன் துணை வங்கிகள் இணைக்கப்பட்டன. இதுபோல் 10 பொதுத்துறை வங்கிகளை 4 வங்கிகளாக்க, வங்கிகள் இணைப்பு திட்டம் வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. 

இதன்படி ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், யுனைடெட் வங்கி ஆகியவை பஞ்சாப் நேஷனல் வங்கியுடனும், சிண்டி கேட் வங்கி கனரா வங்கியுடனும், ஆந்திரா வங்கி, கார்ப்பொரேஷன் வங்கி ஆகியவை யூனியன் வங்கியுடனும் இணைக்கப்பட உள்ளது. அலகாபாத் வங்கி இந்தியன் வங்கியுடனும் இணைக்கப்படவுள்ளது. கொரோனா பாதிப்பு உள்ள நிலையில் இந்த திட்டத்தில் மாற்றம் வருமா என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் இணைப்பு திட்டமிட்டபடி அமலுக்கு வரும் என்றும் இப்போதைக்கு எந்த மாற்றமும் இல்லை என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்