முகக்கவசம் அணியாததால் ரயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி பாதுகாவலர்…! வீடியோ உள்ளே…!
முகக்கவசம் அணியாததால் ரயில்வே ஊழியரை துப்பாக்கியால் சுட்ட வங்கி பாதுகாவலர்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உத்திரபிரதேசத்தில், பரேலியில் ராஜேஷ் என்ற ரயில்வே ஊழியர் ஒருவர் பரோடா வங்கிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் முக கவசம் அணியாமல் சென்றதையடுத்து வங்கி பாதுகாவலர் கேசவ் மற்றும் ராஜேஷ் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து ராஜேசை வங்கி பாதுகாவலர் துப்பாக்கியால் தொடையில் சுட்டுள்ளார். இதில் அவர் காயம் அடைந்துள்ள நிலையில் ,அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் கேசவ் என்ற, பரோடா வங்கியின் பாதுகாவலர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
Resident of civil lines Rajesh was shot in his leg allegedly by guard Keshav Kumar, who is currently in police custody. #Bareilly pic.twitter.com/cAumwL8o1g
— Arvind Chauhan (@Arv_Ind_Chauhan) June 25, 2021