தொடரும் மணிப்பூர் கலவரம்.! இணையதள சேவைக்கான தடை மேலும் நீட்டிப்பு.!
மணிப்பூரில் இணையதள சேவைக்கான தடை ஜூலை 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 2 மாதங்களாக இரு சமூகத்தினர் இடையே எழுந்த பிரச்சனை கலவரமாக மாறி நூற்றுக்கும் மேற்பட்டோரின் உயிரை பறித்தது. பல்லாயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விடுத்து பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். நிலைமையை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
இதற்கிடையே கலவரம் மேலும் பரவாமல் தடுக்க இணைய சேவை முடக்கப்ட்டு இருந்தது. இதன் தடையானது தற்போது மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூலை 10ஆம் தேதி வரையில் மணிப்பூர் மாநிலத்தில் இணைய சேவையானது துண்டிக்கப்பட்டுள்ளது.