கொல்கத்தாவிலிருந்து 6 நகரங்களுக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடை நீட்டிப்பு!

கொல்கத்தாவிலிருந்து 6 நகரங்களுக்கு விமானங்கள் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடையை ஆகஸ்ட் 31ம் தேதி வரை நீட்டிப்பு.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், கொல்கத்தாவிலிருந்து டெல்லி, மும்பை, பூனே, நாக்பூர், சென்னை மற்றும் அகமதாபாத் போன்ற நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால், மேற்கு வங்க அரசு விமான போக்குவரத்தை தடை செய்திருந்த நிலையில், இந்த தடையை ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.