வாக்குச்சீட்டு முறை வராது… தேர்தல் ஆணையம் திட்டவட்டம்…!!
இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தும் முறை வராது என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை பயன்படுத்தி தேர்தல் நடத்து முறை கொண்டு வரப்படாது என்று தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா திட்டவட்டமாககூறியுள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில குறைபாடுகள் இருப்பதாக கூறும் எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை கேட்டு, மீண்டும் வாக்குச் சீட்டு சகாப்தம் கொண்டு வரப்படாது என்றார். இனி வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்கள் மின்னணு வாக்குப்பதிவு முறையே கடைபிடிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.