ஹரியானாவில் கைதால் நகரில் பாதாள சாக்கடை அருகில் சுற்றி திரிந்த நாய்கள் ரெத்தவாடையில் கிடந்த ஒரு பையை வெளியே எடுத்து போட்டு குரைத்தன.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ரத்தத்தோடு ஒரு பை கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த காவல்துறையினர் பையை கைப்பற்றினர்.
அதில் ஒரு பெண் குழந்தை இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.உடனே அந்த குழந்தையை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை 1 கிலோ 100 கிராம் இருப்பதாகவும் குழந்தைக்கு உரிய சிகிக்கை அளித்து வருவதாகவும் கூறியுள்ளனர்.
இதன் காரணமாக காவல்துறையினர் வழக்கு பதிவு விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அப்பகுதியில் உள்ள சி சி டிவி கேமராவை பார்த்தபோது அதில் ஒரு பெண் சாக்கடைக்குள் ஒரு பையை வீசி சென்றது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் காவல்துறையினர் அந்த பெண்ணையும் ,குழந்தையின் புகைப்படத்தையும் போட்டு தேடி வருகின்றனர்.இந்நிலையில் அந்த பெண் பிடிபடும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்.
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…
சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…
சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலில் திமுக…
சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…