15 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த யானை குட்டி….!
15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்த யானைக்குட்டி.
ஒடிசா மாநிலத்தில், மயூர்பஞ்ச் மாவட்டத்தின், வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமத்திற்கு, யானைக்குட்டி ஒன்று இரவு நேரத்தில் உணவு தேடி வந்துள்ளது. அப்போது அந்த யானை குட்டி, 15 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறுதலாக விழுந்துள்ளது.
யானைக் குட்டியின் சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினர் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மீட்பு படையினர், யானைக்குட்டியை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இதனையடுத்து பல மணி நேர போராட்டத்துக்கு பின் யானைக்குட்டி பத்திரமாக மீட்கப்பட்டது. இந்த யானை குட்டி வனப்பகுதிக்குள் விடப்பட்ட நிலையில், அதன் நடவடிக்கைகள் தொடர்ந்து கவனிக்கப்படும் என்று ஒடிசா மாநில வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்