விமானத்தில் பிறந்த ஆண்குழந்தை! வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்!
தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் பயணித்து கொண்டிருந்தது. அந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவர் பயணம் மேற்கொண்டார். அவருக்கு பிரசவ தேதிக்கு முன்னதாகவே பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, அங்கிருந்த விமானப்பணிப் பெண்களின் உதவியுடன் அவர் பறக்கும் விமானத்திலேயே ஆண் குழந்தையை பெற்றேடுத்துள்ளார்.
இதுகுறித்து, இண்டிகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் “6E 122 டெல்லி – பெங்களூரு வழியில் எங்கள் விமானத்தில் ஒரு ஆண் குழந்தை பிறந்தது என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. மாலை 7:40 மணிக்கு விமானம் தரையிறங்கியது என்றும், அனைத்து செயல்பாடுகளும் இயல்பானவை. தாயும் குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர். பெண்ணுக்கு முதலுதவி அளித்த விமான ஊழியர்களை வாழ்த்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இண்டிகோ விமானத்தில் குழந்தை பிறந்துள்ளதை முன்னிட்டு அந்த குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும், இண்டிகோ விமானத்தில் பயணம் செய்யும் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.