இன்று முதல் இரவு நேர ஊரடங்கு – அரசு அறிவிப்பு!

Default Image

அசாம்:மாநிலம் முழுவதும் இன்று முதல் (இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை) இரவு நேர ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அசாம் அரசு அறிவித்துள்ளது. 

உலகையே அச்சுறுத்தி வரும் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றானது இந்தியாவிலும் தீவிரமாக பரவி வரும் நிலையில்,400-க்கும் மேற்பட்டோர் இதுவரை இத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதன்காரணமாக,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.

மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தப்பட்டது.மாநிலங்களில் புதிதாக ஏற்படும் தொற்று,அதன் பரவல் விகிதம் போன்றவற்றை தீவிரமாக கண்காணிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.மேலும்,18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி போடுவதை உறுதிசெய்யவும்,வீடு வீடாக சென்று தடுப்பூசி போடும் பணிகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. 

அந்த வகையில்,மத்தியப் பிரதேசத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து,ஒமைக்ரான் பரவலை தடுக்கும் வகையில் உத்தரபிரதேசம் மநிலத்தில் நேற்று முதல் இரவு நேர(இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும்,திருமண விழாவில் 200 பேருக்கு மேல் பங்கேற்க தடை,ஊரடங்கு நேரத்தில் பொதுமக்கள் வெளியில் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,அசாம் மாநிலத்திலும் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது.இது தொடர்பாக,அசாம் மாநில சுகாதாரத்துறை அமைச்சர் கேசவ் மஹந்த் ஒரு புதிய கட்டுப்பாட்டு நடைமுறையை அறிவித்தார்.அதன்படி,இன்று முதல் இரவு 11:30 முதல் காலை 6 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

அசாமின் புதிய உத்தரவு படி,அனைத்து வணிக நிறுவனங்கள், உணவகங்கள், ஷோரூம்கள், மளிகைக் கடைகள் இரவு 10:30 மணிக்குள் தங்கள் கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் ஒமைக்ரான் தொற்றால் யாரும் பாதிக்கவில்லை. இருப்பினும், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு இந்த ஊரடங்கு உத்தரவு டிசம்பர் 31, 2021 அன்று பொருந்தாது என அசாம் அரசு தெரிவித்துள்ளது.

GO

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்