Categories: இந்தியா

மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்பு…!கவனத்தில் கொள்வோம்…!காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன்

Published by
Venu

மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை என்று காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.
கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் பங்கேற்றுள்ள காவிரி மேலாண்மை வாரியத்தின் 2-வது கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் மற்றும் தொழில்நுட்பத்துறை தலைவர் சுப்ரமணியம் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். கர்நாடகாவில் மேகதாது அணை கட்ட முயற்சி மேற்கொண்டுள்ள கர்நாடக அரசுக்கு இந்தக் கூட்டத்தில் தமிழக அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.
கர்நாடக அரசு மேகதாது குறித்த வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்ய மத்திய நீர்வள ஆணையம் அளித்துள்ள அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் வலியுறுத்தப்பட்டது.

இதன் பின் டெல்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் கூறுகையில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் அடுத்த கூட்டம், ஜனவரியில் நடைபெறும் .இன்று நடைபெற்ற கூட்டம் பயனுள்ளதாக அமைந்தது. சில விஷயங்களில் முடிவு எடுத்துள்ளோம் காவிரி விவகாரத்தில் அனைத்து உறுப்பினர்களும் விரிவாக விவாதித்தோம் .இந்தாண்டு பருவமழை சிறப்பாக உள்ளது.காவிரி படுகை பகுதிகள் நல்ல மழை பெற்றிருக்கின்றன.மேகதாது விவகாரத்தில் தமிழக அரசு எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளது. அவற்றை கவனத்தில் கொள்வோம். மேகதாது விவகாரத்தில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி தேவை என்றும் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

வன்கொடுமை விவகாரம் : “தைரியமாக புகார் கொடுங்க” அமைச்சர் கீதாஜீவன் பேச்சு!

தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…

30 minutes ago

புரதச்சத்து நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயிறு முட்டை மசாலா அசத்தலான சுவையில் செய்யும் முறை..!

சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…

1 hour ago

மீனவர்கள் விவகாரத்தில் இனி பேச எதுவும் இல்லை! இலங்கை அமைச்சர் திட்டவட்டம்!

இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…

1 hour ago

வன்கொடுமை விவகாரம் : மாணவி புகார் பெறப்பட்டது எப்படி? அமைச்சர் கோவி.செழியன் விளக்கம்!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

2 hours ago

அந்த சார் யார் என்பதை காவல்துறை மறைக்கிறது – திர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேச்சு!

சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…

2 hours ago

கிண்டல் செய்த ரசிகர்கள்! செம கடுப்பான விராட் கோலி!

மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுவுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் தொடரின் இரண்டாவது நாளில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் தனது…

3 hours ago