ரூ.5 லஞ்சம் வாங்கிய கம்பியூட்டர் ஆபரேட்டர்.! கைது செய்த லஞ்ச ஒழிப்புத்துறை.!
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம அலுவலகத்தில் விவசாயிகளுக்கு அரசு நில ஆவணங்களை வழங்க ரூ.5 வாங்கிய மோர்கண்டா கிராமத்தைச் சேர்ந்த கணினி ஆபரேட்டர் நவீன்சந்திர நகும் என்பவரை லஞ்ச ஒழிப்புத்துறை கைது செய்துள்ளனர்.
நில ஆவணங்களை வழங்க ரூ.5 வாங்கும் தகவலை காவல்துறையினருக்கு சிலர் தெரிவித்த நிலையில், மோர்கண்டா இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் குழு ஒன்றை அமைத்து கொண்டு நவீன்சந்திர நகும் லஞ்சம் வாங்கியபோது கையும் களவுமாக கைது செய்தனர். ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நவீன்சந்திர நகுமிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவம் குறித்து பேசிய இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் “கடந்த 2013ஆம் ஆண்டில் இருந்து நவீன்சந்திர நகும் இங்கு பணியாற்றி வருகிறார். விவசாயிகளுக்கு நில வருவாய் ஆவணங்கள் மற்றும் உரிமைக் கடிதங்களை வழங்குவது தான் அவருடைய வேலை. அப்போது , விவசாயிகளுக்கு அரசு நில ஆவணங்களை வழங்க ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.5 வாங்கி கொண்டு இருந்ததுள்ளார். அதில் 2 ரூபாய் அரசாங்கத்திற்குச் செலுத்தியுள்ளார்.
ஆனால், நாங்கள் சென்றபோது ஒரு விண்ணப்பத்திற்கு 10 ரூபாய் வாங்கி கொண்டு அதில் 5 ரூபாயை வாங்கி பைக்குள் வைத்து கொண்டதாக எங்களுக்கு புகார் வந்தது. இதன் அடிப்படியில் அவருக்கு பொறி வைத்து பிடித்தோம்” என்றும் இன்ஸ்பெக்டர் எம்.டி.படேல் தெரிவித்துள்ளார்.