கொரோனாவை குணப்படுத்தும் ஆனந்தையாவின் ஆயுர்வேத சொட்டு மருந்து – உயர்நீதிமன்றம் அனுமதி…!

Published by
Edison
  • ஆந்திராவை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஆனந்தையா அவர்களின் கத்தரிக்காய் சொட்டு மருந்தை,
  • கொரோனாவுக்கு மருந்தாக பயன்படுத்த தற்போது ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனாவுக்கு எதிரான மருந்துகள் பல்வேறு இடங்களிலும் கண்டறியப்பட்ட வண்ணம் இருக்கிறது.

அந்தவகையில்,ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபட்டினம் எனும் கிராமத்தை சேர்ந்த போனிகி ஆனந்தையா எனும் ஆயுர்வேத மருத்துவர் கத்தரிக்காய் மூலம் லேகியம் தயாரித்து கொரோனாவுக்கு மருந்து அளித்து வந்துள்ளார்.

  • இந்த மருந்து கொரோனாவை குணப்படுத்துவதாக நம்பி மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக சென்று வாங்க தொடங்கினர்.
  • இவரது லேகியத்தை உட்கொண்ட சிலர் கொரோனாவிலிருந்து உடனடியாக குணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.
  • இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அவர்களுக்கு தகவல் தெரிந்ததை அடுத்து,ஆனந்தையா அவர்கள் தயாரித்த மருந்து கொரோனாவை குணப்படுத்துமா என்பது குறித்த உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக ஐசிஎம்ஆர் குழுவினரிடம் இந்த மருந்து ஒப்படைக்கப்பட்டு ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டது.
  • மேலும் இந்த ஆய்வு முடிவு வெளிவரும் வரை இந்த கத்தரிக்காய் லேகியத்தை விநியோகம் செய்ய வேண்டாம் என தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.
  • இதனையடுத்து,இதுகுறித்து ஆந்திர அரசு நியமனம் செய்த மருத்துவ குழு, ஆயுஷ் அமைச்சகம் மற்றும் திருப்பதி தேவஸ்தான ஆயுர்வேத நிபுணர்கள் நடத்திய ஆய்வில் இந்த மருந்தால் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லை என தெரிவித்தது.

அதன்பின்னர்,ஆனந்தையா அவர்களின் கத்தரிக்காய் லேகியத்தை மக்களுக்கு கொடுப்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.ஆனால் கத்தரிக்காய் லேகியதுக்கு மட்டுமே அனுமதி எனவும், கண்ணில் விடக்கூடிய கத்தரிக்காய் சொட்டு மருந்துக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவிக்கபட்டது.

இந்நிலையில்,ஆனந்தையாவின் ஆயுர்வேத சொட்டு மருந்தை பயன்படுத்த ஆந்திர உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதன்படி,கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் அளவு குறையும்போது மட்டுமே சொட்டு மருந்தை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.

Recent Posts

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

காரசாரமான புளி மிளகாய் செய்வது எப்படி?.

சென்னை :சட்டுனு ஒரு சைடு டிஷ் வேணுமா?. அப்போ இந்த புளி மிளகாய்  ரெசிபியை  ட்ரை பண்ணி பாருங்க.. தேவையான…

1 minute ago

ஏலியன்களால் கடத்தல்? 3000 ஆண்டுகளுக்கு முன்பே ‘X’ தள கணக்கு தொடங்கிய மஸ்க்!

ஏலான் மஸ்க் எப்போதுமே தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் எதாவது பதிவு ஒன்றை வெளியிட்டு பயனர்களுடன் கலகலப்பாக பேசுவதை வழக்கமான…

30 minutes ago

“மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்., இல்லையென்றால்.,” அன்புமணி ஆவேசம்!

டெல்லி : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. அதானி குழுமம் இந்திய அரசு அதிகாரிகளுக்கு…

45 minutes ago

தமிழகத்தில் இந்த 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…

1 hour ago

பிறந்தநாள்: ‘எனக்கு பேனர் வேண்டாம்’… துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…

2 hours ago

ஏலத்தில் கலக்கிய சிஸ்கே..! மஞ்சள் படையில் இன்னும் யாரை எல்லாம் எடுக்கலாம்?

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…

2 hours ago