அதானி நிறுவனத்திற்கு குட்பை – ஆந்திர அரசு அதிரடி!
அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடமிருந்து நிலக்கரி கொள்முதல் செய்வதற்கான டெண்டர்களை ஆந்திரப்பிரதேச அரசு ரத்து செய்துள்ளது.
மாநிலத்தின் மின் உற்பத்திக்கான நிலக்கரியை இறக்குமதி செய்ய இரண்டு டெண்டர்களுக்கு ஆந்திர அரசு அறிவிப்பு விடுத்திருந்தது.
ஏலத்தில் அதானி நிறுவனம்:
இதனைத் தொடர்ந்து,இந்தியாவின் மிகப்பெரிய நிலக்கரி வியாபாரியான அதானி நிறுவனம் மட்டுமே 5 லட்சம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்றது.
அதைப்போல 7 லட்சத்து 50 ஆயிரம் டன் நிலக்கரிக்கான ஏலத்தில் பங்கேற்ற அகர்வால் நிறுவனம் அதானி நிறுவனத்தை விட அதிக விலையை நிர்ணயித்தது.இதனால்,இரண்டு டெண்டர்களும் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டன.
என்ன விலை?:
அதன்படி,கடந்த மாதம் 5,00,000 டன் தென்னாப்பிரிக்க நிலக்கரியை ஒரு டன்னுக்கு ரூ. 40,000 ($526.50) மற்றும் ஜனவரியில் ரூ. 17,480 ($230.08) விலையில் வழங்குவதாக அதானி நிறுவனம் அறிவித்தது.
ஆந்திர அரசு அதிரடி:
இந்நிலையில்,அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட நிலக்கரி இறக்குமதிக்கான இரண்டு டெண்டர்களை ஆந்திரப் பிரதேச மாநில அரசு ரத்து செய்துள்ளது.நிலக்கரிக்கான விலையை அதிகமாக நிர்ணயித்ததனால் டெண்டர் ரத்து செய்யப்படுவதாக ஆந்திரா அரசு அறிவித்துள்ளது.
விலை உயர்வை காரணம் காட்டி டெண்டர்களை ரத்து செய்வது இதுவே முதல் முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.