கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள அந்தமான் நிக்கோபார் தீவு

இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி கொரோனா இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து அனைத்து நாடுகளிலுமே தனது ஆதிக்கத்தை காட்டி வருகிறது. பல நாடுகளில் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது இந்தியாவின் யூனியன் பிரதேசமான அந்தமான் நிக்கோபார் தீவு பகுதி இல்லாத பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீவில் கொரோனா யாருக்கும் இல்லை என்றும், கடைசியாக தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 4 பேரும் பூரண குணம் அடைந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவில் மொத்தம் 4,994 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 4932 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 62 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.