அனைத்து மாநில தலைமைச்செயலாளர்களுடன் இன்று இரவு ஆலோசனை
அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் இன்று இரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலர் ஆலோசனை நடத்த உள்ளார்.
நாடுமுழுவதும் 3-ம் கட்ட ஊரடங்கு இன்று இரவுடன் முடிவடையும் நிலையில் மேலும் இரண்டு வாரங்களுக்கு (அதாவது மே 31 ஆம் தேதி வரை ) நாடு முழுவதும் ஊரடங்கு நீடிக்கப்படுகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த ஊரடங்கு காலத்திற்கான விரிவான வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் மாலை 7 மணிக்கு வெளியிடப்படும் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், உள்துறை அமைச்சகம் அளிக்கக்கூடிய வழிகாட்டுதல் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுடன் இன்று இரவு 9 மணிக்கு மத்திய அமைச்சரவை செயலர் ராஜிவ் கவ்பா ஆலோசனை நடத்த உள்ளார். மாநில உள்துறை, சுகாதாரத்துறை செயலர்கள், டிஜிபிக்கள் உள்ளிட்டோர் ஆலோசனையில் பங்கேற்க உள்ளனர்.
இந்த நான்காவது கட்ட ஊரடங்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.