மணிப்பூர் மாநிலம் சென்றடைந்த இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள்.!
இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தற்போது மணிப்பூர் மாநிலம் இம்பால் சென்றுள்ளனர்.
மணிப்பூர் மாநிலத்தில் இரு பிரிவினர்கள் இடையே ஏற்பட்ட கலவரம் தொடர்பாக அங்குள்ள மக்களை நேரில் சந்திக்க காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் செல்வார்கள் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன் படி, விமானம் மூலம் கூட்டணி கட்சி தலைவர்கள் தற்போது மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றுள்ளனர். இரண்டு நாள் அங்கு தங்கி இருந்து மக்களின் நிலையை இவர்கள் கேட்டறிய உள்ளனர்.
அடுத்த வாரம் நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, மணிப்பூர் தொடர்பான மக்களின் நிலையை நாடாளுமன்றத்தில் எடுத்து கூறவே கூட்டணி கட்சிகள் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.